இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து, குழல் ஊதியும் வெண்ணெய் உண்டும் மகிழ்ந்தனர்.
விழாவினை பள்ளி முதல்வர் செண்பகவல்லி தலைமை ஏற்று நடத்தினார். பள்ளி தாளாளர் சரஸ்வதி கண்ணையன் ,செயலர் பிரியா சதீஷ்பிரபு, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவித்தனர்.
