திருப்பூர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பள்ளி மேலாளர் தலைமையில், பள்ளியின் கல்வி அலுவலர் முரளிதரன், முதல்வர் சித்ரா குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர்.

மாதா அமிர்தானந்தமயி அம்மாவை வழிபட்டு பகவான் கிருஷ்ணருக்கு அஸ்டோத்திர பூஜை செய்யப்பட்டது. மாணவ, மாணவிகள் கிருஷ்ணா, ராதா வேடமணிந்து வந்தனர். தொடர்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது. உரியடித்தல் நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்வில் ஆசிரயர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.