கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், உன்னத் பாரத் அபியான் குழுவின் சார்பில், தத்தெடுக்கப்பட்ட ஊரான ஊத்துபாளையம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் வழங்கல் மற்றும் செயல்படுத்தப்பட்ட யூபிஏ திட்டங்களின் ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா, உன்னத் பாரத் அபியான் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கிராமத்தில் நடைபெற்று வரும் உன்னத் பாரத் அபியான் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக சூரியஒளி விளக்குகள், மின்விசிறிகள், எழுதுபொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கிராம மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், கிராமத்தின் அடிப்படை தேவைகள், கல்வி முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.