கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஃபியஸ்ட்டா ’25 என்ற இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப கலாச்சார விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவை கே.பி.ஆர் குழுமத் தலைவர் ராமசாமி, செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், முதல்வர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
100க்கும் அதிகமான தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் போட்டிகள், பயிற்சி பட்டறைகள்; 75க்கும் மேற்பட்ட உணவு, கைவினைப் பொருட்கள், முக ஓவிய அரங்குகள்; இராணுவ ஆயுதக் கண்காட்சி, ஜப்பானிய வீதி, வாகனக் கண்காட்சி; பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள், ராட்சத ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன.
முதல் நாளில் பிரேம்ஜி குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர். இரண்டாம் நாளில், விஷ்ணு விஷால், மமிதா பைஜூ, 2கே லவ் ஸ்டோரி திரைப்படக் குழு மாணவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
மாணவர்களுக்கு அறிவு பரிமாற்றம், வியப்பூட்டும் அனுபவங்கள் வழங்கிய ஃபியஸ்ட்டா 25, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.