கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் ‘ஆற்றல் மாற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது.

தொழில்நுட்பம் ஆற்றல் மாற்றத்தில், குறிப்பாக எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரத் துறைகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது  என்ற தலைப்பில்  ரோனேசன்ஸ் ஹோல்டிங் இன்ஜினியரிங் குரூப்பின் இயக்குநர் மற்றும் தலைவர் குப்புசுவாமி பேசினார்.  அதிநவீன தொழில்நுட்பங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறையை எவ்வாறு நிலையான ஆற்றல் தீர்வுக்கு மாற்ற உதவுகின்றன என்பதை பற்றி ஃபோர்டெக் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இயக்குநர் ரவிச்சந்திரன் எடுத்துரைத்தார்.

பாரத் இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸின் நிர்வாக இயக்குநர் கமலக்கண்ணன் பங்கேற்று அதிக மீள் மற்றும் தன்னிறைவு ஆற்றலை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைப் பற்றி விளக்கினார். மேலும் இதிலுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் யோசனைகளை வல்லுநர்கள் பகிர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை கூறினர்.