கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி தலைமை தாங்கினார். முதல்வர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பிரியா செந்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் முகமது பாதுஷா, கோவை மாவட்டச் செயலாளர் கண்ணப்பன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வினாடிவினா, கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம், ரங்கோலி, தனிப்பாடல், தனி நடனம், குழு நடனம் எனப் பல போட்டிகளும், ஆண், பெண் இருபாலருக்குமான கைப்பந்துப் போட்டியும், அறிவியல் மாதிரிப் படைப்புப் போட்டியும் நடைபெற்றது. வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையில் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது.

