கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடைபெற்றது. விழாவில் கான்பூர் ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் நச்சிகேதா திவாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

கல்லூரியின் இயக்குநர் சி.ஏ. வாசுகி விழாவிற்கு தலைமை தாங்கி, மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் கலையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் திறம்பட வழங்கினர்.

மேலும், சிறந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வி, கலை, விளையாட்டு போன்ற பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.