கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், பண்பாடு மற்றும் திறன் திருவிழா நடைபெற்றது.

இதில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

2 20

தனிநபர் நடனம், குழு நடனம், தனிநபர் பாடல், குழு பாடல், மைம், அட்சாப், டப்ஸ்மாஷ் போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வினாடி வினா, போஸ்டர் வடிவமைப்பு, புகைப்படம், ரங்கோலி மற்றும் புதையல் வேட்டை போன்ற போட்டிகள் நடைபெற்றன.

13

விழாவில் நேரடி இசை நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் புன்யா பங்கேற்று பாடினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி, கே.எம்.சி.ஹெச் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை தலைமை நிபுணர் மருத்துவர் பரமசிவன் ஆகியோர் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.

9