அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மூன்று நாள் நடைபெறும் “சத்கமயா 2025” என்ற கலாச்சார முகாமை மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாமில், ஆசிரியர்கள், அகாடமிக் சமூகத்தினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆய்வுக்கட்டுரை விளக்கங்கள், சிறப்புரைகள் மற்றும் கலாச்சார அமர்வுகள் ஆகியவை அடங்கும்.
ஆளுநர் பேசியதாவது: நவீன அறிவியல், ஆட்சி மற்றும் நெறிமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாரதத்தின் பாரம்பரிய ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆன்மிகம் இல்லாத அறிவு அகங்காரமாக மாறும். பக்தியுடன் இணைந்தால், அது ஞானமாக மாறும். அறிவியல் மற்றும் அக வளர்ச்சியை இணைப்பதில் அம்மாவின் உபதேசங்களின் பங்களிப்பை குறிப்பிட்டார்.
நெறிமுறை கட்டமைப்புகள் மற்றும் மேம்பட்ட உலோகவியல் நடைமுறைகள் உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டினார். கலாச்சார மதிப்புகள், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
