கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில், இரப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் குறித்த கேஸ்ட்ரோஹெப்கான் கருத்தரங்கு தர்மபுரியில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், முன்னணி மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டு, சிறப்பு சிகிச்சை முறைகள், அதன் நடைமுறைச் சவால்கள் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்தனர்.
கருத்தரங்கை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர்அமுதவள்ளி துவக்கிவைத்தார். கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, ‘கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் கே.எம்.சி.ஹெச் முன்னணியில் உள்ளது. இதுபோன்ற கருத்தரங்குகள், புதிய மருத்துவ தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள உதவும்’ என்று பேசினார். நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, ‘நவீன சிகிச்சை முறைகளை தொடர்ந்து வழங்குவதில் கே.எம்.சி.ஹெச் உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
200-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இரப்பை குடல் மற்றும் கல்லீரல் நோய்கள் தொடர்பான சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.