கோவை, வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையால் ரூ.2.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர். கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி, துணைத்தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி முன்னிலை வகித்தனர்.

கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் அருண் பழனிசாமி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி, உதவி ஆணையாளர் ராம்குமார், மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்சன், கோவை கிழக்கு காவல் உதவி ஆணையாளர் வேல்முருகன், 6-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

