கே. எம். சி. ஹெச். மருத்துவமனையானது ஒரே நாளில் 270 மேமோகிராம் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து ஆசிய மற்றும் இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. நிகழ்விற்கு மருத்துவமனை இயக்குநர் நல்ல ஜி பழனிசாமி தலைமை வகித்தார். இதில், செயல் இயக்குநர் அருண் பழனிசாமி, கதிரியக்க துறை தலைவர் மத்தேயு சேரியன், ஆசியா புக் ஆப் ரெக்கார்டஸ் தீர்பாளர் சகாயராஜ், மார்பக புற்றுநோய் மருத்துவ ஆலோசகர் பிரேமா, ரூபா ரங்கநாதன், மருத்துவனை மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.