கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை 1000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது.
கே.எம்.சி.ஹெச் பயன்படுத்தும் அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பம், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நிகரற்ற துல்லியம் மற்றும் நோயின் தன்மைக்கேற்ப மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ய உதவுகிறது.
இந்த மேம்பட்ட அணுகுமுறை துல்லியமான இம்பிளாண்ட், மென்மையான திசுக்கள் சேதமாவது குறைதல், மருத்துவமனையில் தங்கும் காலம் குறைதல், விரைவான குணமடைதல் மற்றும் நீண்ட கால செயல்பாட்டு மேம்பாடு ஆகிய பல நன்மைகளை நோயாளிகளுக்கு அளிக்கிறது.
கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்: 1000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் என்பது வெறும் எண் மட்டுமல்ல; இது 1000 தனிநபர்கள் நோயின் பிடியில் இருந்து தங்கள் இயக்கம் மற்றும் வலியிலிருந்து சுதந்திரத்தை மீட்டெடுத்ததைக் குறிக்கிறது.
இந்த மைல்கல், நோயாளிகளின் நலனில் எங்கள் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இந்த சாதனையை சாத்தியமாக்கிய எங்கள் எலும்பியல் குழு மருத்துவர்கள் திருமலைசாமி, தென்னவன், லெனின் பாபு, பாஸ்கரன், பூபதி கிருஷ்ணன் மற்றும் எலும்பியல் துறை பணியாளர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள் எனக் கூறினார்.
செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறியதாவது: ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தில் எங்களது இந்த சாதனை, மருத்துவ கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இந்த தொழில்நுட்பம் எங்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு முன்பைக்காட்டிலும் மேம்பட்ட துல்லியத்தை அடைய உதவுகிறது. மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மூலம் நோயாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்.
