கே.எம்.சி.ஹெச் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் ‘மெடிஃபெஸ்ட் 2025’ என்ற தலைப்பில் வருடாந்திர கல்லூரி தின விழா நடைபெற்றது. கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்வி மற்றும் பாடநெறி சார்ந்த இதர செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கே.எம்.சி.ஹெச் பார்மசி கல்லூரி, செவிலியர் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மதுரா பழனிசாமி, அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் புவனேஸ்வரன், தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் நடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

