கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் இணைந்து பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாமை நடத்தின.
காரமடை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை, சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடுகள்,கிட்டப்பார்வை, தூரப்பார்வை,கண்ணில் நீர் அழுத்தம்,கண்புரை, ஒற்றைத் தலைவலி,கண்ணில் சதை வளர்ச்சி,கண் சம்பந்தமாக அனைத்து நோய்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இசிஜி உட்பட உடல்நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ராசா, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை நகரக் கழக செயலாளர் வெங்கடேஷ், உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.