கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, புது டெல்லியில் ஜூன் 21 அன்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை சார்பில் நடைபெற்ற FE ஹெல்த்கேர் உச்சிமாநாடு மற்றும் விருதுகள் 2025 விழாவில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் ஒன்பது விருதுகளை வென்றுள்ளது.
இதன் மூலம் கோவையிலிருந்து அதிக விருதுகளைப் பெற்ற ஒரே மருத்துவமனை மற்றும் இந்த ஆண்டு அதிகபட்ச அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே மருத்துவ நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கேஎம்சிஹெச் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் நாராயணன் மருத்துவமனை சார்பாக விருதுகளைப் பெற்றுக்கொண்டார். இந்த மகத்தான அங்கீகாரம் நோயாளி பராமரிப்பு, புதுமையான மருத்துவ நடைமுறைகள் மற்றும் பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் விரிவான மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்குவதற்கான கேஎம்சிஹெச்-ன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இது தொடர்பாக கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறியதாவது: FE ஹெல்த்கேர் உச்சிமாநாடு மற்றும் விருதுகளில் கிடைத்த இந்த தனிச்சிறப்பான அங்கீகாரத்தால் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். ஒன்பது விருதுகள் கேஎம்சிஹெச் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினராலும் வழங்கப்படும் அயராத அர்ப்பணிப்பு, நிபுணத்துவம், கனிவான சேவைக்கான சான்றாகும். இது சமூகத்திற்கு மிக உயர்ந்த தரத்தில் சேவை செய்வதற்கு எங்களின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறியதாவது: தேசிய, தென்னிந்திய அளவில் பல சிறப்புப் பிரிவுகளில் அங்கீகரிக்கப்படுவது எங்களின் விரிவான திறன்கள், நோயாளி சார்ந்த அணுகுமுறைகு சான்றாக விளங்குகிறது. இந்த விருதுகளை எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ள நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்தார்.
தேசிய அளவிலான விருதுகள்
- பல்துறை மருத்துவ சேவையில் சிறப்பான செயல்திறன்
- புற்றுநோய் மருத்துவத்தில் சிறப்பான செயல்திறன்
- இருதய நோய் சிகிச்சையில் சிறப்பான செயல்திறன்
- சிறுநீரக சிகிச்சையில் சிறப்பான செயல்திறன்
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பான செயல்திறன்
தென்னிந்திய அளவிலான விருதுகள்
- அவசரகால மற்றும் தீவிர சிகிச்சையில் சிறப்பான செயல்திறன்
- நரம்பியல் மற்றும் நரம்பியல் அறிவியல் சிகிச்சையில் சிறப்பான செயல்திறன்
- தாய் – சேய் பராமரிப்பில் சிறப்பான செயல்திறன்
- இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சையில் சிறப்பான செயல்திறன்
