கே.ஐ.டி கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன்  முன்னிலை வகித்தனர்.

கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜகோபால், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ், பள்ளபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் சரண்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் சமத்துவபொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.  தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை, வள்ளிக்கும்மி போன்றவை நடைபெற்றது.  பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ்காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.