மெட்டாசேஜ் அலையன்ஸ் மற்றும் கிக்கானி குளோபல் அகாடமி இணைந்து நடத்திய தொழில்நுட்ப விழா பச்சாபாளையத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும் நோக்கில், மெட்டாஇன்னோவா என்ற தளம் அறிமுகம் செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்ப அமர்வு, ஹேக்கத்தான், ரோபோ வடிவமைப்புப் போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வில் கிக்கானி குளோபல் அகாடமி முதல்வர் ஷாலினி நாயர், தாளாளர் துஷார் கிக்கானி, நாஸ்காம் இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதய சங்கர், பாரடே ஓசோன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் கூடலிங்கம், மெட்டாசேஜ் மேலாண்மை இயக்குனர்கள் ஜெயக்குமார் வெள்ளையன், அனுஷ் ஜெயக்குமார், ஆகாஷ் ஜெயக்குமார் மற்றும் முதன்மை செயல் தலைவர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.
