கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலத்தின் 83வது பிறந்தநாளையொட்டி, மருத்துவமனை கலையரங்கில் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். கே.ஜி.ஐ.எஸ்.எல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார். மனோதத்துவ நிபுணர் டாக்டர் ராஜ நடராஜன் மற்றும் ஹெல்த்கேர் சொல்யூஷன் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பிரான்சிஸ் சோமர்வெல் ஆகியோருக்கு “கிரேட்டர் அச்சீவ்வர்” என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது.