கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் கலை விழா ‘ப்ரணயா-2025’ நடைபெற்றது. விழாவை பதிவாளர் ரவி தொடங்கி வைத்தார், மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்திறன் வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
விழாவில் நடனக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, அழகுக்கலை, கைவினைக்கலைப் போட்டிகளுடன் குறும்பட உருவாக்கம் மற்றும் பல்சுவைப் பொழுதுபோக்குப் போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு ரூ. 2,00,000 ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.