கற்பகம் பொறியியல் கல்லூரியில் ‘துருவா 25’ தேசிய அளவிலான தொழில்நுட்ப, விளையாட்டு, கலாச்சார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மூன்று நாட்கள் நீடித்த இந்நிகழ்வில், 186 கல்லூரிகளைச் சேர்ந்த 6,352 மாணவர்கள் பங்கேற்று, 104 தொழில்நுட்ப போட்டிகள், 10க்கும் மேற்பட்ட விளையாட்டு நிகழ்வுகள், 54 கருத்தரங்குகள், 25 கலாச்சார நிகழ்ச்சிகளில் திறமை வெளிப்படுத்தினர்.
முதல்வர் குமார் சின்னையன் விழாவைத் தொடங்கி வைத்தார். முதல் நாளில் விளையாட்டு போட்டிகள், இரண்டாம் நாளில் தொழில்நுட்ப, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றன. இறுதி நாளில் 32 கலாச்சார நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன.
பிரபல இசைக்கலைஞர்கள் அமன் சகா, மேகா ராமசாமி, சந்தோஷ் ஹரிஹரன், மாளவிகா சுந்தர், தேக்கின்காடு இசைக்குழு உள்ளிட்டோர் கண்கவர் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.