கற்பகம் பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமையாற்றினார். கல்லூரியின் முதல்வர் குமார் சின்னையன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக ஐஐடி. சென்னை, கட்டிட பொறியியல் துறையின் பேராசிரியர் அருண் மேனன் கலந்துகொண்டு, சுமார் 1,250 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு, 12 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி, பட்டமளிப்பு விழாவிற்கான பேருரையை நிகழ்த்தினார்.
இந்த விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, அறங்காவலர் தமயந்தி வசந்தகுமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.