மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் இன்று தொடங்கியது.
விரதம் இருக்கும் பக்தர்கள், சிவாச்சாரியார்கள் காப்பு கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி, யாகசாலை பூஜை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, தீபாராதனை, திருவீதி உலா நடைபெறுகிறது.
வரும் 28 ஆம் தேதி வரை காலையில், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 6:30 மணி முதல் 7 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமி சண்முகார் சாலை, மாலை 3 மணிக்கு முருகப்பெருமான் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்காரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் முருகப்பெருமாள் தரகாசுரன், பானுகோபன், சிங்கமுக சூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்கிறார். தொடர்ந்து முருக பெருமானின் கோபத்தை தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும் புஷ்ப பல்லாக்கில் வள்ளி – தெய்வானை உடன் வீதி உலாவு வருகிறார். மறுநாள் சுப்ரமணியசாமி வள்ளி – தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் சுப்பிரமணியசாமி திருவீதி உலா வருகிறார்.
