கோவையில் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நகை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் இன்று தொடங்கியது. ஜனவரி 24 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அழகிய கைவினைத் திருவிழா மற்றும் மணமகள் விழா என்ற கருப்பொருளில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியில், மிக நுணுக்கமாக கைவினை செய்யப்பட்ட தங்கம், வைரம், ஜடாவ் மற்றும் போல்கி நகைகளின் நேர்த்தியான தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில் பழமுதிர் நிலையம் பார்ட்னர் மிதுனா துரைராஜ், பிரிட்ஜ்வுட்ஸ் பள்ளிகள் குழுமம் நிறுவனர் வித்யாபிரபா, டைட் அண்ட் ப்ளூம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரிதி மால்யா, இன்னர் வீல் கிளப் ஆஃப் கோவை தலைவர் ராதிகா பரமேஷ், 10X ஹெல்தி ஸ்கின் நிறுவனர் பத்மா பிரியா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியின் சிறப்பம்சமாக, கலாஷா ஃபைன் ஜுவல்ஸின் புதிதாக வடிவமைக்கப்பட்ட மணப்பெண் நகைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
