கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு நாளையொட்டி, கோவை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆகஸ்ட் 7, காலை 8 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.

சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலை, ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து அமைதிப் பேரணி தொடங்குகிறது. தொடர்ந்து காந்திபுரம் அண்ணா சிலை அருகில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.