காயத்ரி ராஜ்முரளி 44- வது வார்டு மாமன்ற உறுப்பினர், கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  ரோட்டரி சென்டினியல் கிளப் இணைந்து இலவச மருத்துவ முகாமை ராமலிங்கம் நகர் சில்ரன்ஸ் பார்க் யோகா சென்டரில்  நடத்தியது.

KMCH 2 KMCH 3

நிகழ்விற்கு ரோட்டரி சென்டினியல் கிளப் கே.சி. சீனிவாசன் தலைமை வகித்தார்.  முகாமில் இ.சி.ஜி. பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. மேலும், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சக்கரை அளவு உள்ளிட்வை பரிசோதிக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மருத்துவர்களை ஆலோசித்து பயனடைந்தனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை கே.எம்.சி.ஹெச். மருத்துவ கல்லூரி மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் மணிக்குமார்  செய்தார்