மருதமலை கோவிலின் தக்காராக ஜெயக்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.

மருதமலை முருகன் கோவிலுக்கான அறங்காவலர் குழு, தலைவர் ஜெயக்குமார் தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அறங்காவலர் குழுவின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் திருப்பணி தடை இல்லாமல் நடைபெறவும், புதிதாக அறங்காவலர் குழு நியமிக்கும் வரை, ஏற்கனவே அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்த ஜெயக்குமாரை, அலுவல் சாரா தக்காராக நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைத்தார். அதனையேற்று அரசுக்குரிய அதிகாரத்தின் கீழ்  அவரை தக்காராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.