சமீப காலத்தில் குழந்தையின்மை அதிகரிப்பதைக் காண முடிகிறது. வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களினால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. கருவுற்றலில் பிரச்னை உள்ளவர்களுக்கு ஐ.வி.எஃப் எனும் செயற்கை கருத்தரித்தல் முறை குழந்தை பேற்றை வழங்கும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
உலக ஐ.வி.எஃப் தினம் ஜூலை 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் குழந்தையில்லா தம்பதிகளுக்கான சிறப்பு முகாம் ஜூலை 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் குழந்தையில்லா தம்பதிகள், விந்தணு குறைவு, கருமுட்டை குறைவு, கருக்குழாய் பிரச்சனை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதில் சிறப்பு ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். நவீன சிகிச்சைகளுக்கு 20% தள்ளுபடி உண்டு.
