ஏ.ஐ.சி.டி.ஈ – வாணி திட்டத்தின் கீழ், “புத்துணர்ச்சியூட்டும் நகர மேம்பாடு மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் சர்வதேச கருத்தரங்கு கோவை, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டி, போக்குவரத்து நுண்ணறிவு மற்றும் நிலைத்த நகர வாழ்க்கை போன்ற துறைகளில் புதுமைகள், ஆய்வுகள் மற்றும் கொள்கைகள் பற்றி விவாதிக்கவுள்ளனர்.
ரத்தினம் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கேட்வே சாப்ட்வேர் சொல்யூஷன்ஸின் நிர்வாக மேலாளர் சபரிநாதன் முத்து, ஐடேட்டாமைண்ட் டேட்டா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சி.டி.ஓ உதயகுமார் மதிவாணன், சோஹோ கார்ப் அப்ளிகேஷன் டெவலப்பர் தினேஷ் உள்ளிட்டோர் நகர மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, போக்குவரத்து நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழின் பங்கு குறித்து பகிர்ந்தனர்.
