தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக பாதுகாப்பான, தரநிலையான மற்றும் நிலைத்த உணவு பதன்செய்’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு இரு நாட்கள் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வேளாண் பல்கலைக்கழகங்கள், அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், தேசிய உணவு ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழில்நுட்ப அமர்வுகள், தொழில்–கல்வி நிறுவனம் இடைமுக பணிமனை மற்றும் அறிவியல் கட்டுரை எழுதும் பயிற்சி பணிமனை ஆகியவை இடம்பெற்றன. கருத்தரங்கில் FoodXplore ‘25 நினைவிதழ் வெளியிடப்பட்டது.

சிறப்பு உரையில் கோட்டா வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜோஷி, உணவு பாதுகாப்பு, தரத்தை உறுதி செய்வதில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்து, உணவு தரநிலையாக்கம், நிலைத்தத்தன்மையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
