சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் “செயற்கை நுண்ணறிவு வழிநடத்தும் நிதி 2025: வணிக வளர்ச்சியையும் செலவுக் குறைப்பையும் திறந்திடல்” என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இயக்குனர் சாந்தினி அனிஷ்குமார், செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். துறைத்தலைவர் மீனாட்சி சாரதா கருத்தரங்கு உரை வழங்கினார். இதில் சிங்கப்பூர் குளோபல் ஜீ குரூப் ஆப் கம்பெனியின் இயக்குனர் ராமசாமி கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவின் இன்றைய பயன்பாடு, எதிர்கால வணிகவியல் துறையின் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
இதில் கோயமுத்தூர் கிளை ஐ.சி.எம்.எ தலைவர் மகேஸ்வரன், தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆப் இந்தியா உறுப்பினர் ராகேஷ் சங்கர் ரவிசங்கர், பைனான்ஸ் காக்னிசண்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் இயக்குனர் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
120க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்கினர். இதில் ஏராளமான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
