கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

முதல்வர் சங்கீதா தலைமை தாங்கி, தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர், நிறுவநர் ஆஸ்திரேலியா உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் பாரிஸ்டர், தமிழக அரசின் தமிழறிஞர் விருதாளர்  சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதிய 70வது நூலான  ’மாமதுரை போற்றுதும்’’ நூல் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

சந்திரிகா சுப்ரமண்யன், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆஸ்திரேலியா தமிழ் மாணவர்கள், ஆர்வலர்கள் எழுதிய “எத்திசையும் மணக்கும் தமிழ்” நூலையும், முதுகலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு மாணவி சரண்யா எழுதிய “மனத்தின் மலர்கள்” நூலையும் வெளியிட்டார். தமிழும் தொழில் நுட்பமும்’ எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

மாணவர் மன்றம் சார்பாக குறும்படக்காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும், தமிழ் வளர்ச்சி மன்றம், சிட்னி, ஆஸ்திரேலியாவும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். நிகழ்வில் தமிழ்த்துறைத்தலைவர் (பொ) ராஜலட்சுமி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.