ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
முதல் நாள் விழாவில், வணிகவியல் மற்றும் வணிகவியல் நிர்வாகத்துறை மாணவர்களுக்காக தன்முனைப்பு பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, கனவு, ஆசை, திட்டமிடல் பொருளாதாரம், புத்தகம் படித்தல் போன்ற இலக்கினை நிர்ணயம் செய்வது குறித்து பேசினார்.
இரண்டாம் நாள் விழாவில், அறிவியல் மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்களுக்காக விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் தன்முனைப்பு பேச்சாளர் கோபிநாத் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், தன் வாழ்க்கையை செம்மைப்படுத்த எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமாக இருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் எனப் பேசினார்.
விழாவில் ரத்தினம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மதன் செந்தில், முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதன்மை வணிக அதிகாரி நாகராஜன், இயக்குநர் சீமா செந்தில், கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
