கோவையில் சுங்கம் பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவியர்களுக்கான அடுக்குமாடி கட்டிடப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு தலைவரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதன் பிறகு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.