இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையைச்  சேர்ந்த மாணவன் அனுராக் சிங், பெங்களூர் கோலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நடத்திய ‘ஏரோ ஹேக் 2025’ ஹேக்கத்தான் போட்டியில் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் அந்நிறுவனத்தில் வருடத்திற்கு ரூ.8 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி, வான்வெளி பாதுகாப்பு, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிப்புகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

இம்மாணவர், மனிதர்கள் எளிதில் நெருங்க முடியாத மலைப் பகுதிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்தி மருந்து விநியோகம் மற்றும் பறவைகள் பாதுகாப்பு குறித்த பறவை தடுப்பு அமைப்பு என்ற படைப்பை ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழங்கினார்.

இந்த சாதனையை இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணைச் செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரி முதல்வர் ஜெயா, பேராசிரியர்கள் பாராட்டினர்.