கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், சிறப்பினை முன்னிட்டு ‘நிறுவனத்தின் புதுமை நாள்’ விழா நடைபெற்றது.
மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கோபி கலந்துகொண்டு, அப்துல் கலாம் வாழ்க்கை, அறிவியல் சிந்தனை, புதுமை மனப்பாங்கு மற்றும் இளைஞர்களுக்கான அவரது கனவுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
