இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனம், இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் என்னும் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய பிரீமியம் புராஜெக்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிமுக விழா தொடர்ந்து செப்டம்பர் 13, 14 தேதிகளிலும் நடைபெறுகிறது. சரவணம்பட்டியில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் CHIL IT பார்க் அருகில் இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் கேட்டட் கம்யூனிட்டி அமைந்துள்ளது.

இதில் 2,247 சதுர அடி முதல் 3,363 சதுர அடி வரையிலான 39 பிரீமியம் 3 & 4 படுக்கையறைகளை கொண்ட வில்லாக்கள் அமைந்துள்ளன. இங்கு 1,380 சதுர அடி முதல் 2,431 சதுர அடி வரையிலான 65 விசாலமான 2 & 3 படுக்கையறைகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

in

இந்த புராஜெக்ட் ஆனது தொழில் வல்லுநர்கள், வளர்ந்து வரும் குடும்பங்கள் மற்றும் அதிக இடத்தையும் வசதிகளையும் தேடும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பணியிடங்களுக்கு மிக நெருக்கமான பகுதியிலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

50-க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகள், மிகச்சிறந்த கட்டுமான பொருட்கள், 24 மணி நேர பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புராஜெக்ட் வடிவமைக்கப்படுகிறது.