முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் கே.எம்.சுப்பிரமணியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவராக இருக்கும் கே.எம்.சுப்பிரமணியன் 2-வது முறையாகப் பழனி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இது குறித்து நம்மிடம் அவர் பேசியதாவது: பழனி தண்டாயுதபாணியை அனைத்து தரப்பு பக்தர்களும் விரைந்து தரிசிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும். மேலும், பக்தர்களின் வசதிகள் மேம்படுத்தப்படும். கோவில் வளாகங்களில் சுத்தம்;சுகாதாரத்துடன் தூய்மையாகப் பராமரிக்கப்படும். இவ்வாறு கூறினார்.