கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தலைமை விருந்தினராக பங்கேற்ற ஏவி குழும நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.வி.வரதராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கேப்டன் கே ஃபிட்னஸ் & பயிற்சி அகாடமியின் உரிமையாளர் கண்ணன், கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கே.பி.ஆர் சாம்பியன்ஸ் அகாடமியை திறந்து வைத்து, 3 தேசிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
