கோவை புலியகுளத்தில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து, கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திமுக நகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், உதவி ஆணையர் செந்தில் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.