டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின்  தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் 185+ கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 150 மாணவர்களுக்கு அருட்செல்வர் வித்யா சக்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

எம்.சி.இ.டி தாளாளர் ஹரிஹரசுதன், என்.ஐ.ஏ கல்லூரி நிறுவனங்களின் செயலர் சுப்ரமணியன், கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், முன்னாள் மாணவர் காபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தகுதியான மாணவர்களுக்காக    முன்னாள் மாணவர் உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் முன்னாள் மாணவர் குழுத் தலைவர் மாணிக்கத்திடம் 2 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

NIA 1

சர்வதேச செய்திகளுடன் இணைந்திருங்கள்

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் மற்றும் சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை   உரையில், இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், முக்கியமான உலக நிகழ்வுகள் குறித்த சமீபத்திய செய்திகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய பிரச்சினைகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கும், கற்றலை மேம்படுத்துவதற்கும், எதிர்கால சவால்களுக்குத் தயாராகுவதற்கும் சர்வதேச செய்திகளுடன் தொடர்ந்து இணைந்திருப்பது முக்கியம் என்றார்.

சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துங்கள்

சிறப்பு விருந்தினராக சென்னை, மொபிவெயில் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு பேசுகையில்: தொடர்பு முக்கியத்துவம், பல மொழிகளில் தேர்ச்சி, மனப்பான்மை மற்றும் ஒழுக்கம் ஆகியன வெற்றிக்கான அடிப்படைகள். சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்தவேண்டும். உலக நிகழ்வுகளை அறிந்திருப்பதும் முக்கியம். முழுமையான வளர்ச்சிக்கும் நீண்ட சாதனைகளுக்குமான நேர்மறை அணுகுமுறை, பொறுப்பான பழக்கங்களைக் கற்றுக்கொள்ளுமாறு கூறினார்.