உலக புகழ் பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்.(IBM) நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் கோவையின் ஐ.டி. மண்டலமாக விளங்கும் சரவணம்பட்டி – கீரனத்தம் பகுதியில் உள்ளது.

இந்தியாலேண்ட் டேக் பார்க் வளாகத்தில் அமைந்துள்ள இதன் அலுவலகத்தை மேலும் 26,500 சதுரடிக்கு விரிவுபடுத்த அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விரிவாக்கத்தினால் 550 பேர் கூடுதலாக பணிபுரியும் படி சூழல் உருவாகும். இதற்கு முன்னதாக இதே இடத்தில் நடைபெற்ற விரிவாக்கம் மூலம் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஐ.பி.எம்.ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்.மின் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, க்ளவுட், ஆலோசனை & ஆய்வு ஆகிய பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக இது உள்ளது. மிக விரைவில் இந்தியா முழுவதிலும் குவாண்டம் கம்பியூட்டிங் துறை ரீதியான முதலீடுகளை இந்த நிறுவனம் செய்யவுள்ளது.

 

 

 

 

 

 

T