கோவை கணபதி வெற்றி விநாயகர் கோவில் பகுதியில் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. வடக்கு சட்டமன்ற தொகுதி உருவான காலத்தில் இருந்து அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை தற்போது பாஜகவும் தொடர போகிறது.
திமுக என்ற தீய சக்தியை அழிக்க வேண்டும் என்றால், அதற்கு பலம் பொருந்திய கூட்டணி எடப்பாடி பழனிச்சாமியார் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே
தீய சக்தி திமுக, கோவையை கெடுப்பதற்கு என்றே கரூரில் இருந்து ஒரு இறக்குமதியை செய்துள்ளார்கள். கொங்கு மண்டலம் எப்பொழுதும் விஷக்கிருமிகளை வளர விடுவது இல்லை. கடந்த முறை போலவே இந்த முறையும் பத்துக்கு பத்து என்று கொங்கு மண்டல தளபதி எஸ்.பி வேலுமணி தலைமையை இந்த மக்கள் அடையாளம் காட்டுவார்கள்.

இங்கு வந்துள்ள அனைவரும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஏன் திமுக வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும், ஏன் ஸ்டாலின் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் கையில் புழங்கிக் கொண்டிருக்க கூடிய போதைப்பொருள் ஆகியவற்றை பற்றி எடுத்துச் செல்ல வேண்டும்.
வடக்கு சட்டமன்ற தொகுதியின் அத்தனை தேவைகளுக்கும் பலமிக்க குரலாக சட்டமன்றத்தில் நான் இருப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தில் அமையும் பொழுது, வடக்கு தொகுதியின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
