இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி துறை சார்பில் 16வது தேசிய அளவிலான ஹைபோகஸ்-25, தொழில்நுட்ப சிம்போசியம் நடைபெற்றது. இதில், கோவை மாநகரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் சிறப்புரை ஆற்றினார். அவர், சைபர் அச்சுறுத்தல்களின் வளர்ச்சி, இணைய பாதுகாப்பு மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கினார். மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த, பேப்பர் பிரஷன்டேஷன், பிழைத்திருத்தம், வினாடி வினா, வலை வடிவமைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். கல்லூரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா, கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் துறைத்தலைவர் ஜெயசுதா உள்ளிடோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.