இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் வரும் 29ம் தேதி தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கான நீச்சல் தேர்வு போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் நடந்தது.

இதில் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி சுகிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டில்லியில் நடக்க உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கிறார்.

மேலும் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று, சென்னையில் நடக்க உள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரின் சகோதரியான 12ம் வகுப்பு மாணவி மோகிதா மாவட்ட அளவில் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்ற உள்ளார். இவர்களை பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா சதீஷ் பிரபு, பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி பாராட்டினர்.