இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருநங்கை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் குறித்து இருநாள் பயிற்சியாளர் பயிற்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் சங்கரநாராயணன் கலந்துகொண்டு, திருநங்கை சமூகத்தினர் எதிர்கொள்ளும் சட்ட, சமூக மற்றும் சுகாதார சவால்கள் குறித்து உரையாற்றினார். மேலும், திருநங்கை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

HICAS 1

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயல்படும் பல்வேறு அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, சமூகப் பணியியல் துறைத் தலைவர் புனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.