இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஹைக்ரெசென்டோ’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சிறப்புரையாற்றினர்.

தொடக்க உரையாக “போட்டியை தாண்டி உயர ஆராய்ச்சி, தொழில் மற்றும் புதுமை” என்ற தலைப்பில் பிரபாகரன் பேசினார். முதல் அமர்வில் ‘யூனிகார்ன் சிந்தனை: புதுமை மூலம் உயர்வு’ என்ற தலைப்பில் ராம்குமார் சிங்காரம், இரண்டாம் அமர்வில், ‘மாற்றமடைந்த காலத்தில் மாற்றுத்திறன் தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் குமரவேல், மூன்றாம் அமர்வில், ‘நல்ல சமூக மாற்றத்திற்கு அடுத்த தலைமுறை தலைவர்களை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் மகாலட்சுமி சரவணன் உரையாற்றினர்.

hicas lamp

நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, முதுகலை வணிக மேலாண்மை துறை இயக்குனர் சுதாகர், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.