இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹிலாரிகாஸ் 2026 நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், சிந்தனை கவிஞர் கவிதாசன் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.  இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி மற்றும் நிர்வாக செயலர் பிரியா ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தனது கல்லூரிக் கால நினைவுகளை மீண்டும் பெற்றதாக உரையாற்றினார். கவிஞர் கவிதாசன் பேசுகையில், உப்பில்லாமல் கூட இருக்கலாம் நட்பு இல்லாமல் இருக்க முடியாது, கல்லூரி காலம் என்பது இளமையை வளமையாக்கக் கூடியது என்றும் உரையாற்றினார்.

கல்லூரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில், கல்வி ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி உடையது அதனால் கல்வி அனைவருக்கும் அடிப்படையானது என உரையாற்றினார்.

நிகழ்வில் ஹிப்ஹாப் ஆதி கல்லூரி வாழ்வின் முக்கிய பங்கு குறித்தும், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மாணவர்களின் உற்சாகம் என்னை மேலும் உற்சாகமூட்டியது என்றும், ஜீவா பலமுறை இக்கல்லூரியில் பங்கேற்றதன் மகிழ்வையும், ஸ்ரீ லீலா கல்வி  நம் வாழ்வை மாற்றக்கூடியது என்றும் பேசினர்.

hilaricas

பரிதாபங்கள் கோபி சுதாகர் தங்களது நகைச்சுவை பேச்சால் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தினர். மேலும், பிக்பாஸ் வியானா, பாடகி ரேஸ்மா ஷர்மா, 29 படக் குழுவினர், யூத் படக் குழுவினர், பிளாக் பைபிள் படக் குழுவினர் பங்கேற்றனர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட மாணர்வர்கள் தங்களின் தனித் திறனை வெளிப்படுத்தினர்.