ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரில் துறை மற்றும் கோவை தீசன் ஆர்கானிக் பார்ம்ஸ் இணைந்து மூலிகை உணவுகள் மற்றும் அறிவியல் கண்காட்சியினை நடத்தியது.
பல்வேறு வகையான மருத்துவ குணம் நிறைந்த செடிகள், மூலிகை வகைகள், சிறு தானியங்கள், நாட்டு காய், கனி வகைகள், பாரம்பரிய உணவு தயாரிப்பு முறை, புளித்த உணவு தயாரிப்பு முறை ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றது.
உணவு வகைகள் மற்றும் நுண்கிருமிகள் பங்களிப்பு பற்றி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ், ஆய்வுப்புலன் முதன்மையர் சபரீஷ் ஆகியோர் தலைமை தங்கினர். துறை தலைவர் ஸ்ரீனிவாசன் செயல் விளக்கங்களை கூறினார். மொத்தம் 427 ரத்தினம் கல்லூரி மாணவர்களும், 122 பிற கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
