உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டெல்லி தி லீலா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டிராவல் அவார்ட்ஸ் விழாவில் ஜி.டி. ஹாலிடேஸ் “சிறந்த பயண பிராண்ட் 2025” என்ற விருதினைப் பெற்றது. தொடர்ச்சியாக 4வது ஆண்டாக இந்த விருதை பெறுகிறது.

இவ்விழாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை விருந்தினராகவும், சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் சுமன் பில்லா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சேவைத் திறன், புதுமையான பயணத் தீர்வுகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திய சிறந்த செயல்திறன் ஆகியவற்றுக்காக ஜி.டி. ஹாலிடேஸ் இந்த விருதுக்குத் தேர்வானது.

“இந்த விருது எங்கள் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், ஊடகக் கூட்டாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. அவர்களின் நம்பிக்கையே எங்களை தொடர்ந்து புதுமை செய்து மேம்பட்ட சேவைகளை வழங்க தூண்டுகிறது,” என ஜி.டி. ஹாலிடேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.